On Sunday, September 29, 2024, during the morning service at Church of the American Ceylon Mission, St. Paul’s Church a special occasion was celebrated as part of the 40th anniversary of the church. On this day, Mas. Pushparasa Subasujan received his confirmation, marking his acceptance as a full member of the church. The sacrament of confirmation was administered by Rev. A.S. Thevagunanathan, Chairperson of the CACM, following the preparation and recommendation by the parish priest, Rev. K. Andrew Jeyananthan, who attested that Mas. Subasujan was ready to receive communion.
Rev. Thevagunanathan delivered an inspiring sermon on the theme "Desert is Becoming Fertile," drawing from the Scripture readings: Exodus 3:1-12, Apostles 9:1-15, and Mark 3:13-19. The congregation included Mr. N.K. Rameshkumar, Treasurer of the CACM, and the Director of the Diaconal Ministry Mr.Piraveen Joseph, along with many church members and relatives of those being confirmed. The church was filled with joy and blessings as the community gathered to celebrate this milestone.
Following the service, a breakfast was arranged by the families of those who had been confirmed, offering a time of fellowship and celebration. We extend our heartfelt congratulations to Mas. Pushparasa Subasujan. May they continue to grow in their faith and walk with Christ, nourished by His grace.
சத்தியபுரம் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை, தூய பவுல் ஆலயத்தின் 40வது அகவையினை முன்னிட்டு 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வழிபாட்டின்போது செல்வன். புஸ்பராசா சுபசுஜன் என்பவர், திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களிடம் திடப்படுத்தல் பெற்றுத் திருச்சபையின் முழு அங்கத்தவராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இவர் திடப்படுத்தல் பெறத் தகுதியுள்ளவர் என்பதனைத் திருச்சபையின் நிர்வாகம் உறுதிப்படுத்த, அந்த நிர்வாகம் சார்பில் சபைக்குரு அருட்பணி. கே. அன்ரூ ஜெயானந்தம் அவர்கள் திருச்சபையின் தலைவர் முன்பாகக் கர்த்தரின் மந்தையில் இணைத்துக் கொள்ளும்படி திடப்படுத்தல் பெறுபவரை முன்நிறுத்தினார்.
இவ்வழிபாட்டில் திருச்சபையின் தலைவர், யாத்திராகமம் 03: 01 – 12, அப்போஸ்தலர் 09: 01 – 15 மற்றும் மாற்கு 03: 13 – 19 ஆகிய பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு “பாலைவனம் பசுமையாகின்றது” எனும் தலைப்பில் இறைசெய்தியினைப் பகிர்ந்து கொண்டார். இவ்வழிபாட்டில் சி. ஏ. சி. எம் திருச்சபையின் பொருளாளர் திரு. என். கே. ரமேஸ்குமார் அவர்களுடன் சேவைத் திருப்பணி மன்ற இயக்குநர் திரு. பிரவீன் ஜோசப் அவர்களும் திருச்சபையின் விசுவாச சமூகமாக சபைமக்கள் மற்றும் உறவினர்களென ஆலயம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு இறையாசியினைப் பெற்றுக் கொணடனர்.
திடப்படுத்தல் வழிபாட்டின் பின்னர், திடப்படுத்தல் பெற்றவரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐக்கிய காலை ஆகாரத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திடப்படுத்தல் பெற்றுக் கர்த்தரின் பந்தியில் இணைக்கப்பட்டவர் இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.