In honour of International Women's Day, the Jaffna Regional Women's guild hosted a heartwarming retreat at the Navaly Church on Friday, March 8th, 2024. The event, led by the President of the Women's Guild, Mrs. P. Doreen, drew women from all walks of life for a day filled with worship, reflection and fellowship.
The retreat commenced with a spirit of devotion as members of the Women's Guild led the initial worship. Captain Mrs. S. Thangeswari of the Salvation Army then delivered a captivating sermon, followed by an insightful Bible study and discussion centered on the theme of "What is beauty in women?" This thoughtful exploration likely sparked meaningful conversations among the attendees.Rev. S. Suthagini further enriched the program with a message on the significance of women's ministry in the Bible. She also incorporated some fun games, adding a touch of joy and lightness to the day.
The retreat also mark a significant moment with the election of the committee for the upcoming year. The newly elected secretary expressed her heartfelt gratitude to everyone who contributed to the event's success, including the Navaly Church Women's Guild, committee members, and the parish priest, Rev. Antony Suthagar. Rev. Suthagar's thoughtful arrangements for lunch, snacks, and tea ensured a comfortable and enjoyable experience for all the participants. The event concluded amicably with prayer and benedictions by the parish priest.
யாழ் பிராந்திய பெண்கள் சங்கத்தினரால், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு 08-03-2024 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் நவாலித் திருச்சபையில் பெண்கள் சங்கத் தலைவி திருமதி. பி. டொறீன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான ஞான ஒடுக்க நிகழ்வு நடைபெற்றது.
ஆரம்ப வழிபாட்டினை வருகை தந்த பெண்கள் சங்க அங்கத்தவர்களால் நடாத்தப் பட்டது. இறைசெய்தியினை இரட்சணியசேனையை சேர்ந்த கப்டன். எஸ். தங்கேஸ்வரி அவர்களால் வழங்கப்பட்டது. இதன் பின்னர் இரட்சணிய சேனை கப்டன். எஸ். தங்கேஸ்வரி அவர்களால் “பெண்களுக்கு அழகு எது?” என்ற தலைப்பில் திருமறை படிப்பும் கலந்துரையாடலும் இடம் பெற்றன. தொடர்ந்து அருட்பணி. எஸ். சுதாஜினி அவர்களால் திருமறையில் பெண்கள் ஆற்றிய திருப்பணிகள் என்ற சிந்தனையில் வழி நடத்தியதுடன் விளையாட்டுகளையும் முன்னெடுத்தார்.
இதன் பின்னர் புதியாண்டுக்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததோடு விசேடமாக மதிய உணவு மற்றும் தேனீர் சிற்றூண்டிகளையும் வழங்கிய நவாலி திருச்சபையின் பெண்கள் சங்கத்தினர், நிர்வாக செயற்குழுவினர்கள் மற்றும் அருட்பணி. ஜே. அன்டனி சுதாகர் ஆகியோருக்கும் செயலாளர் திருமதி. மாலா மதியபரணம் அவர்களால் நன்றி கூறப்பட்டு, சபைக்குருவின் ஜெபத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.