The Jaffna Regional Youths held their annual gathering on February 3rd, 2024, at Tellippalai Church under the leadership of Youth Coordinator, Mr. R. Sujanthan. The event united young people from across the region featuring a variety of activities designed to foster connection and learning. Participants engaged in group events, informative seminars, and engaging games, creating a dynamic and interactive atmosphere.
Following a delicious lunch, the focus shifted to the future with the election of the new committee of youths. The event concluded with a spirit of gratitude as the former secretary and treasurer were presented with commemorative gifts in appreciation of their dedicated service. Discussions then turned towards planning the upcoming year's youth activities, ensuring a continued sense of purpose and engagement. The gathering was overseen by the Regional Chairperson, Rev. M. D. Paulsuresh, further emphasizing the importance of spiritual guidance within the youth ministry. Additionally, Rev. J. Antony Suthagar and Rev. J. Gnanapiragasam added their presence and support to the event.
It's noteworthy that the Jaffna Regional Youth actively uses social media platforms like Facebook and YouTube. They've consistently published original content, including special songs, faith-based reflections for both regular and Lenten seasons, and even poetry collections, all in celebration of international days. This creativity serves to inspire and connect with a wider audience.
யாழ் பிராந்திய வாலிபர் பணியின் வருடாந்த ஒன்றுகூடல் 03.02.2024 அன்று தெல்லிப்பளைத் திருச்சபையில் வாலிபர்பணி இணைப்பாளர் திரு. ஆர். சுஜந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் குழு நிகழ்வுகள், கருத்தமர்வுகள் மற்றும் விளையாட்டுகள் என்பன நடைபெற்றன. மதிய ஐக்கிய உணவின் பின்னர் வாலிபர் பணிக்கான புதிய உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சென்ற வருடங்களில் பணியாற்றிய செயலாளர் மற்றும் பொருளாளருக்கான நன்றி நவிலும் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டு வாலிபர் பணியின் புதிய ஆண்டுக்கான செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு ஒன்றுகூடல் இனிதே நிறைவுற்றது.
மேற்படி நிகழ்வில் பிராந்திய குருமுதல்வர் அருட்பணி. எம். டி. போல்சுரேஷ் மற்றும் அருட்பணியாளர்களான அருட்பணி. ஜே. அன்டனி சுதாகர், அருட்பணி. ஜே. ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வாலிபர் பணியகத்தினால் விசேட பாடல் அடங்கிய இறுவெட்டு, பொதுவான மற்றும் தவக்காலச் சிந்தனைகள், சர்வதேச தினங்களை முன்னுட்டு கவிதை தொகுப்புக்கள் போன்றவற்றை தமது முகநூல் வழியாகவும் Youtube செயலி வழியாகவும் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது