A seminar for Sunday school teachers was organized by the Religious Education Board of the Church of the American Ceylon Mission in collaboration with National Christian Council of Sri Lanka was held on the 22nd and 23rd of November at Christian Theological Seminary of Sri Lanka. It was held as an
introductory session for the Sunday school teachers on the National Christian Council of Sri Lanka is new curriculum.
In this workshop, 49 teachers and 5 priests from all four regions of our CACM Church participated, along with 6 attendees from the CSI Church, 5 from the Methodist Church, 3 from the Baptist Church, and 4 from the Anglican Church, bringing the total number of participants to 72. As the resource persons of the Sri Lanka National Christian Council, its president Archbishop Rt. Rev. Dr. V. Padmathayalan and Mrs. Vanajah Rajkumar, Mrs. Libnia Ruban, Mrs. Lavanya Roshan along with Mrs.Stella Darshini, Program coordinating manager of the Commission for Christian Education and their staff conducted this session well. Training for action songs and craft activities was provided by three resource persons from Child Evangelism Fellowship.
At the end of the session, certificates were given to the participants and the resource persons were also honored with a memento presented by the CACM Church. This occasion was also graced by the chairperson of the Church of the American Ceylon Mission Rev.A.S.Thevagunananthan.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் சமயக் கல்விக் குழு, இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்து ஒழுங்கு செய்த ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களிற்கான செயலமர்வு ஐனவரி மாதம் 22,23 திகதிகளில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கான அறிமுக செயலமர்வாக இது நடாத்தப்பட்டது. இதில் எமது சி.எ.சி.எம் திருச்சபையின் 4 பிராந்தியங்களையும் சேர்ந்த 49 ஆசிரியர்களும் 5 குருமாரும் பங்குபற்றியதுடன் எனைய திருச்சபைகளான சி.எஸ்.ஐ திருச்சபை 6 மெதடிஸ்த திருச்சபை 5 பப்டிஸ்த திருச்சபை 3 அங்கிலிக்கன் திருச்சபை 4 ஆசிரியர்களுமாக சேர்த்து மொத்தம் 72 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் வளவாளர்களாக அதன் தலைவர் பேராயர். அதி. வண. அறிவர். வே. பத்மதயாளன் மற்றும் திருமதி. வனஜா இராஜ்குமார், திருமதி. லிப்னியா ரூபன், திருமதி. லாவன்யா றொஷான், ஆகியோரும் இவர்களுடன் கிறிஸ்தவ கல்விக்கான ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திருமதி.ஸ்டெலா தர்ஷினி மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டு இச் செயலமர்வினை சிறப்பாக நடாத்தினார்கள். அபிநயப் பாடல், ஆக்கச் செயற்பாடுகளிற்கான பயிற்சியினை Child Evangelism Fellowship ஸ்தாபனத்தின் 3 வளவாளர்கள் வழங்கினர்கள்.
செயலமர்வின் இறுதியில் பங்குபற்றியவர்களிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் வளவாளர்களிற்கு சி.எ.சி.எம் திருச்சபையால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதின்போது சி.எ.சி.எம் திருச்சபை தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணாணந்தன் அவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.