The Jaffna region joyfully celebrated the birth of Christ with a combined Carol Service on December 15, 2024, at the CACM Thellipalai Church. held under the guidance of Rev. M.D.Paulsuresh, the Jaffna Regional Chairperson, and facilitated by the Evangelical Committee.The service featured heartwarming performances by choirs from various churches across the region, including Thellipalai, Karainagar, Araly, Pandatheripu, Alaveddy, Earlalai South, Uduvil, Sathiyapuram, Manipay, Navaly, City Mission, Chavakacheri, and CTS students. The beautifully decorated church provided a fitting ambiance for this festive occasion. The service culminated with a powerful sermon by Rev. D. S. Mathiyaparanam, the Parish Priest of Manipay, who eloquently compared the birth and resurrection of Jesus Christ with the experiences of marginalized communities. The enthusiastic participation of numerous parishioners and clergy made this a truly memorable and uplifting celebration of the Christmas season.
2024ம் ஆண்டின் யாழ் பிராந்திய திருச்சபைகளின் ஒன்றிணைந்த இறைமகன் வருகை இன்னிசை வழிபாடானது நற்செய்திப் பணிக்குழுவின் அனுசரணையுடனும் பிராந்திய தலைவர் அருட்பணி. எம். டி. போல்சுரேஸ் அவர்களுடைய வழிகாட்டுதலிலும் மிகவும் சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் தெல்லிப்பளைத் தேவாலயத்தில் 15.12.2024 ஞாயிறு மாலை 2.00 மணிக்கு நடைபெற்றது. இதில் காரைநகர், அராலி, பண்டத்தரிப்பு, அளவெட்டி, தெல்லிப்பளை ஏழாலை தெற்கு, உடுவில், சத்தியபுரம், மானிப்பாய், நவாலி, நகர்பணி, சாவகச்சேரி ஆகிய திருச்சபைப் பாடகர் குழுவினர் பாடல்களை வழங்க, சுன்னாகம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி மாணவர்களும் ஒரு சிறப்புப் பாடலை வழங்கி வழிபாட்டுக்கு மெருகூட்டினார்கள்.
மிகச் சிறப்பான முறையில் அலங்கரிப்பட்ட ஆலயத்தில் நடைபெற்ற இவ் இன்னிசை வழிபாட்டில் இறைசெய்தியினை மானிப்பாய் திருச்சபையின் அருட்பணியாளரான டீ. எஸ். மதியாபரணம் அவர்கள் இயேசுவின் பிறப்பினையும் உயிர்ப்பினையும் ஒப்பிட்டு புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்னும் தொனிப்பட பகிர்ந்து கொண்டார். குருமார், இறைமக்களென ஆலயம் நிறைந்த மக்கள் இறைவனை ஆராதித்து மனநிறைவுடன் திரும்பினர்.