A joyous occasion unfolded at the City Mission Church of the American Ceylon Mission as four individuals were confirmed as full communicant members of the congregation. The service was held on Sunday the 01st of September 2024, was presided over by the esteemed Chairperson of the CACM, the Rev. A. S. Thevagunananthan.
The newly confirmed members, Lareina Nirmalan, Jayana Janenthiran, Jeyantharasa Paul Danessan, Chanthirasegar Asaanth had diligently prepared for this significant step in their spiritual journey under the guidance of the church’s parish priest, Rev. M. Jeyanantharasa. In a powerful sermon, Rev. Thevagunananthan drew inspiration from Doers of the Word – Care for the Enviorment based on the text the book of James Chapter 01 verse 19.
Following the confirmation ceremony, a celebratory tea party and breakfast was hosted by the families of the newly confirmed members. The event provided a wonderful opportunity for fellowship and rejoicing as the church community welcomed its newest additions. As these four individuals embark on their journey as full communicant members, the church extends its heartfelt congratulations and prayers, wishing them continued blessings and growth in their faith.
01-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணிக்கு யாழ் நகர்பணி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையில் 04 பேர் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களால் திடப்படுத்தல் பெற்றுத் திருச்சபையின் முழு அங்கத்தவர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர். இவர்கள் திடப்படுத்தல் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பதனைத் திருச்சபையின் நிர்வாகம் உறுதிப்படுத்த, அந்த நிர்வாகம் சார்பில் சபைக்குரு அருட்பணி. எம். ஜெயானந்தராசா அவர்கள் திருச்சபையின் தலைவர் முன்பாகக் கர்த்தரின் மந்தையில் இணைத்துக் கொள்ளும்படி திடப்படுத்தல் பெறுபவர்களை முன்நிறுத்தினார்.
திருச்சபையின் தலைவர் இறைசெய்தியினை யாக்கோபு 01:19 திருமறைப் பகுதியினை ஆதாரமாகக் கொண்டு “வார்த்தையின்படி நடந்து சுற்றாடாலைப் பராமரிப்பவராக இருத்தல்” எனும் தலைப்பில் பகிர்ந்து கொண்டார். பின்வருவோர் திடப்படுத்தல் பெற்றுத் திருச்சபையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
01. செல்வி. லரீனா நிர்மலன்
02. செல்வி. ஜய்னா ஜனேந்திரன்
03. செல்வன். ஜெயானந்தராசா போல் டணிஸ்சன்
04. செல்வன். சந்திரசேகர் அசாந்
இவர்களுக்கான மறைக் கல்வி வகுப்புக்களைச் சபைக்குரு அருட்பணி. எம். ஜெயானந்தராசா அவர்கள் முறைப்படி நடாத்திப் பிள்ளைகள் திடப்படுத்தலினைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தியிருந்தார். இருபது வகுப்புக்கள் நிறைவு பெற்றதன் பின்னர் திடப்படுத்தல் பெறுபவர்களுக்கான ஞான ஓடுக்கம் மருதனார்மடம், கிறிஸ்தவ சேவ ஆச்சிரமத்தில் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் மற்றும் அருட்பணி. ஜே. அன்ரணி சுதாகர் ஆகியோரால் 31-08-2024, சனிக்கிழமையன்று நடாத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திடப்படுத்தல வழிபாட்டின் பின்னர், திடப்படுத்தல் பெற்ற பிள்ளைகளின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐக்கிய காலை ஆகாரத்திலும் தேனீர் விருந்திலும் அனைவரும் கலந்து கொண்டனர். திடப்படுத்தல் பெற்று கர்த்தரின் பந்தியில் இணைக்கப்பட்டவர்களை இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.