At the American Ceylon Mission Manipay Church on January 5, 2025, a special service commenced with the covenant of "You are our God and we are your people." The service then delved into the profound theme of God's revelation to humanity.
In this sacred moment, three young members of the church – Kathirvelu Dishani, Kathirvelu Thilakshka, and Vijayaruban Thas Antony – were welcomed into full communion. The ceremony was conducted by Rev. A.S. Thevagunananthan, chairperson of the American Ceylon Mission Church. The children were lovingly guided in their preparation by Rev. D.S. Mathiyaparanam, the parish priest.
We extend our heartfelt congratulations to these young individuals as they join the flock of God. May God's abundant blessings be upon them always.
அமெரிக்கன் சிலோன் மிசன் மானிப்பாய் திருச்சபையில் 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று “நீரே எங்கள் கடவுள், நான் உம் மக்கள்” என்ற உடன்படிக்கையைப் புரிந்து கொள்ளும் நோக்குடன், கிறிஸ்துவே கடவுளின் வெளிப்பாடு என்ற கருப்பொருளுக்கு அமைவாகவும் காலை வழிபாடு ஆரம்பமாகி இறை ஓட்டத்தில் மக்களை அழைத்துச் சென்றது.
இந்த அழகிய தருணத்தில் இத்திருச்சபையை சார்ந்த அன்பின் பிள்ளைகளான கதிர்வேலு டிசானி, கதிர்வேலு திலக்ஷ்கா, விஜயரூபன் தாஸ் அன்ரனி ஆகியோர் அருப்பணியாளர் டி. எஸ். மதியாபரணம் அவர்களின் திருமறை மற்றும் இயேசு கிறிஸ்துவின் இறையரசின் வாழ்வியல் பணியின் கருத்தியலோடும் பிரமாணங்களின் வழிகாட்டலோடும் பிள்ளைகளை இறைபற்றில் வழிப்படுத்தியிருந்தார். திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணாந்தன் அவர்களின் தலைமையில் ஜெபத்தோடும், இறை ஆசியோடும் இவர்கள் மூவரும் மானிப்பாய் திருச்சபையின் முழு அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். கர்த்தரின் மந்தையில் இணைக்கப்பட்ட இவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம். இவர்கள் இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர உங்கள் ஜெபங்களில் தாங்குங்கள்.