On Monday 19.08.2024, a one-day Vacation Bible study was held at Karainagar CACM Church on the theme of "Let us learn and observe the Lord's commandments Deligently ". 52 Sunday school children participated in this. 22 teachers and assistants also participated and conducted the event effectively.The children spent the day happily and enthusiastically with Bible studies, songs and games. Children from Karainagar, Navaly, Manipay, Pandatheruppu, Sathyapuram, Uduvil, Thellipalai, Chavakacherri, Eralai South churches participated in this event.
19.08.2024 திங்கட்கிழமை யாழ் பிராந்திய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கெனக நடத்தப்பட்ட "கட்டளைகளை கற்போம் கருத்தாய் கடைபிடிப்போம்" என்ற தொனிப்பொருளில் ஒரு நாள் விடுமுறை வேதாகம கற்றல், கற்பித்தல் நிகழ்வு காரைநகர் சி.ஏ.சி.எம் திருச்சபையில் நடைபெற்றது. இதில் 52 ஞாயிறு பாடசாலை பிள்ளைகள் பங்குபற்றினர். 22 ஆசிரியர் மற்றும் உதவியாளர்களும் பங்குபற்றி இந்நிகழ்வினைப் பயனுள்ளதாக நடாத்தினர்கள். திருமறைப் படிப்பு, பாடல்கள், விளையாட்டுகளெனப் பிள்ளைகள் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த நாளைச் செலவிட்டனர். காரைநகர், நவாலி, மானிப்பாய், பண்டத்தரிப்பு, சத்தியபுரம், உடுவில், தெல்லிப்பழை, சாவகச்சேரி, ஏழாலை தெற்கு திருச்சபைகளின் பிள்ளைகள் இதில் பங்குபற்றிப் பயன் பெற்றனர்.