தவக்காலத்தை முன்னிட்டு வன்னிப் பிராந்தியங்களின் பல இடங்களில் நற்செய்தி கூட்டங்கள் பிராந்திய ரீதியில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 23.02.2024 திகதி அன்று கிளிநொச்சி, பாரதிபுரம் திருச்சபைகள் இணைந்து முறுகண்டி திருச்சபையில் நடைபெற்றது. இதில் பிராந்திய அருட்பணியாளர்கள் வழிபாட்டை முன்னெடுக்க அருட்பணி. பி. விஜயதாஸ் அவர்கள் இறைசெய்தியை பகிர்ந்தார்.
தொடர்ந்து 01.03.2024 திகதி அன்று சுதந்திரபுரம் திருச்சபையில் நடைபெற்றது. இதன் போது அருட்பணி. ஆர். ஜோன் செல்வம், அருட்பணி. பி. சந்திரசேகர், அருட்பணி. எஸ். சதிஸ்குமார், சகோதரன் பிரகாஷ் ஆகியோர் வழிபாட்டை முன்னெடுத்தனர். இதன்போது அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் இறைசெய்தியை பகிர்ந்தார்.
மேலும் 08.03.2024 திகதி அன்று புனித தோமா ஆலயம் பூவரசங்குளத்தில் நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. இவ் வழிபாட்டை அருட்பணி. ஆர். யோன்செல்வம், அருட்பணி. வி. டேவிட் நிருசிகன், அருட்பணி. ஜி.ஜெயகுமார், அருட்பணி. எஸ். சதீஸ்குமார், பாஸ்டர் ரொபின்சன் ஆகியோர் இறை வழிபாட்டை நடாத்தினார்கள். இதில் இறைசெய்தியை அருட்பணி. ரி. சுசேந்தன் அவர்கள் வழங்கினார்.
மேலும் 15.03.2024 சமாதானபுரம் திருச்சபையில் நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. இவ் வழிபாட்டை அருட்பணி. ஆர். யோன்செல்வம், அருட்பணி. வி. டேவிட் நிருசிகன், அருட்பணி. ஜி.ஜெயகுமார், அருட்பணி. ரி. சுசேந்தன் ஆகியோர் இறை வழிபாட்டை நடாத்தினார்கள்.