On Saturday, August 31st, 2024, an event was held at the Murukandy CACM Church in the Vanni Region of Sri Lanka. Themed "Learn the Commandments and Follow It Meaningfully," the event brought together Sunday school children from Samathanapuram, Murukandy, Konavil, Suthananthirapuram, and Jeyapuram churches.
Over 53 enthusiastic children, along with their dedicated teachers and assistants, participated in the program. The opening service was conducted by the Murukandy Church Sunday School children and teachers. Mrs. Y. Jegatheswary, a Sunday School teacher from Murukandy Church, shared the Word of God.
Mrs. M. Thurkkadevi provided an insightful introduction to the Ten Commandments, guiding the children through a meaningful Bible study. Teachers from Samathanapuram Church (Mrs. K. Sivapoorany and Mrs. P. Thushara) and Murukandy Church (Mrs. Y. Jegatheswary and Mrs. M. Thurkkadevi) contributed significantly to the event's success, along with teachers who participated in the Jaffna Region program.
After a nourishing lunch, Rev. S. Suthasini took the lead in conducting the afternoon session. To conclude the day on a joyful note, the children were taken to a nearby park, where they enjoyed recreational activities and returned home with happy hearts.The event was graced by the presence of Vanni Region priests, including REB Director Rev. P. Kalavathy, Parish Priest of Murukandy Church Rev. S. Satheeskumar, and Parish Priest of Konavil Church Rev. V. David Nirushikan. Their participation provided valuable guidance and support to the program.
31.08.2024 சனிக்கிழமை வன்னிப் பிராந்திய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கான நிகழ்வு முறிகண்டி சி.ஏ.சி.எம் திருச்சபையில் "கட்டளைகளை கற்போம் கருத்தாய் கடைபிடிப்போம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. இதில் சமாதானபுரம், முறிகண்டி, கோணாவில், சுதந்திரபுரம், ஜெயபுரம், ஆகிய திருச்சபைகளில் இருந்து மொத்தம் 53 ஞாயிறு பாடசாலை பிள்ளைகள் பங்குபற்றிப் பயன்பெற்றனர். இவர்களுடன் ஆசிரியர், உதவியாளர்கள், மற்றும் குருமார் என 25 பேர் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்ப வழிபாட்டை முறிகணடித் திருச்சபையின் ஞாயிறு பாடசாலை பிள்ளைகளும், ஆசிரியர்களும் இணைந்து நடாத்தினார்கள். இறைசெய்தியை முறிகணடித் திருச்சபையின் ஞாயிறு பாடசாலை ஆசிரியர் திருமதி. யோ. ஜெகதீஸ்வரி வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருமதி. ம. தூர்க்காதேவி அவர்களால் பத்துக் கட்டளைகள் பற்றிய அறிமுகத் திருமறைப்படிப்பு நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு சமாதானபுரம் திருச்சபையினைச் சேர்ந்த திருமதி. க. சிவபூரணி, திருமதி. பி. துசாரா மற்றும் முறிகண்டி திருச்சபையினைச் சேர்ந்த திருமதி. ம. தூர்க்காதேவி, திருமதி. யோ. ஜெகதீஸ்வரி ஆகியோருடன் யாழ். பிராந்திய நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரியர்களும் இணைந்து கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டனர். மதிய உணவின் பின்னர் அருட்பணி. சுதாசினி சுதாகரன் அவர்களால் நிகழ்வின் இறுதிச் செயற்பாடுகள் நடாத்தப்பட்டது.
மாலையில் இதன் இறுதி நிகழ்வாக கிளிநொச்சியில் உள்ள பசுமைப் பூங்காவிற்கு பிள்ளைகள் அழைத்து வரப்பட்டு அங்கே விளையாடி மகிழ்ந்து வீடு சென்றனர். வன்னிப் பிராந்திய குருவானவர்களில் பிராந்திய சமயக் கல்வி குழு இணைப்பாளர் அருடபணி. பி. கலாவதி, முறிகண்டி திருச்சபை அருட்பணியாளர் அருட்பணி. சு. சதீஸ்குமார், கோணவில் திருச்சபை அருட்பணியாளர் அருட்பணி. வி. டேவிட் நிருக்சிகன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.