The Church of the American Ceylon Mission (CACM) St. Jacob’s Church in Samathanapuram recently marked a significant milestone with the celebration of its 40th anniversary. The festivities commenced with a holy communion service on July 24, 2024, setting the tone for a series of events filled with joy, community spirit, and devotion. On July 27, 2024, the celebrations continued with a mixed cycle race. Alongside the race, numerous other games and activities were organized, bringing the community together in a spirit of friendly competition and fellowship.
The culmination of the anniversary celebrations took place on July 28, 2024, with a holy communion service at 8:30 AM. The service was led by the CACM Chairperson, Rev. A. S. Thevagunananthan, who also delivered a sermon. Joining him were the parish priest of St. Jacob’s Church, Rev. T. Susenthan, and the CACM Secretary, Rev. A. B. Thevathas. After the service, the chairperson unveiled a commemorative name board honoring the priests who have served the church faithfully over the past 40 years. This was followed by the annual church sale, a much-anticipated event that brought the community together in support of the church’s ongoing mission.
A Bible quiz competition, conducted by Mr. Atputhajeevan, a student of the Christian Theological Seminary, saw enthusiastic participation from neighboring churches, including St. Thomas Church in Konavil, St. Jacob’s Church in Samathanapuram, and Methodist Church in Akkarayan. St. Thomas Church, Konavil, emerged victorious in this spirited contest. Following a communal lunch provided by church members, a grand procession began from the Akkarayan Base Hospital junction, featuring priests, church members, and students who were trained in keyboard, accompanied by a vibrant musical march. Upon reaching the church, the procession was met with welcoming dances, songs, and drama performances.
A special moment in the celebration was the recognition and appreciation of 12 priests who have served the church over its 40-years history. Additionally, Rev. M. Luke John and Rev. Biyoora Selvakumar, who were called to ministry from Samathanapuram Church, were felicitated by the congregation. The Wanni Tamil People Association further enriched the event by presenting saplings to all those who were felicitated and participated in the celebrations. Certificates were awarded to students trained in keyboard, marking their achievements. Mrs. A. Lurthamma shared a brief yet insightful history of the church's 40 years, followed by the ceremonial cutting of an anniversary cake, symbolizing the joyous occasion. The event concluded with a blessing, leaving the congregation uplifted and united in their faith.
The celebration was graced by the presence of several distinguished guests, including Rev. A. S. Thevagunananthan, Rev. A. B. Thevathas, Rev. G. D. Mynaseelan, Rev. D. S. Mathiyaparanam, Rev. M. Luke John, Rev. S. Biyoora, Rev. M. Jeyanantharasa, Rev. A. Kamalakumaran, Rev. V. David Nirushikan, Rev. John Thevasagayam (Retired, CSI), Rev. S. Thayalan, Mr. N. K. Rameshkumar, and Mr. R. Sujanthan, all of whom extended their heartfelt wishes and blessings. Special recognition goes to the parish priest, Rev. S. Susenthan, and the dedicated members of the parish community, whose hard work and commitment made this event a resounding success
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை, சமாதானபுரம் - தூய யாக்கோபு ஆலயம் தனது 40 ஆவது அகவையினை வெகு விமர்சியாக கொண்டாடியது. ஜூலை மாதம் 25ஆம் தேதி 2024 தனது அகவை தினத்தன்று சிறப்புத் திருவிருந்து வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 27-07-2024 அன்று காலை இருபாலருக்குமான சாட்சிய சைக்கிள் ஓட்ட போட்டி ஒன்று சிறப்புற நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இறுதி நாள் நிகழ்வாக 28-07-2024 அன்று காலை 8:30 மணிக்கு திருவிருந்து வழிபாடினை திருச்சபைத் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் முன்னெடுத்ததோடு இறைசெய்தியையும் பகிர்ந்து கொண்டார். இவ்வழிபாட்டினை திருச்சபையின் ஊழியர் அருட்பணி. ரி. சுசேந்தன் அவர்களும் திருச்சபையின் செயலாளர் அருட்பணி. ஏ. பி. தேவதாஸ் அவர்களும் இணைந்து நடாத்தினார்கள். வழிபாட்டினைத் தொடர்ந்து 40 வருட காலம் இத்திருச்சபையில் பணிபுரிந்த அருட்பணியாளரின் பெயர் பட்டியல் பலகை திருச்சபை தலைவரினால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வருடத்திக்கான விற்பனை விழா திருச்சபை மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர், திருச்சபைகளுக்கு இடையிலான வேதாகம புதிர் போட்டிகள் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி மாணவன் சகோ. எஸ். அற்புதஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன. இப் போட்டிகளில் தூய தோமா ஆலயம் - கோணாவில், தூய யாக்கோபு ஆலயம் - சமாதானபுரம், மெதடிஸ்த ஆலயம் - அக்கராயன் ஆகியன கலந்து கொண்டன. திருச்சபைகளுக்கு இடையில் நடைபெற்று இந்த வேதாகமப் புதிர் போட்டிகளில் தூய தோமா ஆலயம் - கோணாவில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
திருச்சபை மக்களினால் பகிரப்பட்ட ஐக்கிய மதியவுணவினைத் தொடர்ந்து அக்ராயன் குளம் ஆதார வைத்தியசாலை சந்தியில் இருந்து அருட்பணியாளர்கள், கீபோர்ட் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் திருச்சபை விசுவாசிகள் அனைவரும் இசை அணிவகுப்புடன் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். இந்த சாட்சியின் பவனி ஆலயத்தினையடைந்ததும் வரவேற்பு நடனங்கள், பாடல்கள், நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டன. இதன்போது 40 வருட கால பகுதிகளில் சமாதானபுரம் திருச்சபையில் பணியாற்றிய 12 இறைபணியாளருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் சமாதானபுரம் திருச்சபையில் இருந்து இறை பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து இறை பணியாற்றிக் கொண்டிருக்கும் அருட்பணி. எம். லூக் ஜோன் அவர்களும் அருட்பணி. பியூரா செல்வகுமார் அவர்களும் திருச்சபையாலும் திருச்சபை மக்களாலும் கௌரவிக்கப் பட்டனர். கௌரவிக்கப்பட்ட அனைத்து இறை பணியாளர்களுக்கும் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் அனுசரையுடன் கனிதரும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. மட்டுமல்லாது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவாக அவ்வொன்றியத்தினரால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் கீபோர்ட் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் 40 ஆண்டு கால தூய யாக்கோபு ஆலயம் - சமாதானபுரம் திருச்சபையின் வரலாற்றை திருச்சபையின் சார்பில் திருமதி. ஏ. லூத்தம்மா அவர்களால் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 40 வது அகவையை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்வு நடைபெற்று இறையாசியுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
இந்நிகழ்வில் அருட்பணியாளர்கள். ஏ. எஸ். தேவகுணானந்தன், ஏ. பி. தேவதாஸ், ஜி. டி. மைனசீலன், டி. எஸ். மதியாபரணம், எம். ஜெயானந்தராசா, ஏ. கமலகுமரன், எம். லூக் ஜோன், வி. டேவிட் நிருக்சிகன், எஸ். டானியல் செல்வகுமார், பியூரா செல்வகுமார், ஜோன் தேவசகாயம் (ஓய்வுநிலை, தென்னிந்திய திருச்சபை), எஸ். தயாளன் (மெதடிஸ்த திருச்சபை), திரு. என். கே. ரமேஷ்குமார், திரு. ஆர். சுஜந்தன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்ததுடன் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ் அணைத்து நிகழ்வினைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்த சபைக்குரு அருட்பணி. ரி. சுசேந்தன் அவர்களுக்கும் அவருடன் துணை நின்று உழைத்த சபை விசுவாசிகளுக்கும் எமது பாராட்டுக்கள்.