On Sunday, October 13th, 2024, at 10:30 am, the Suthanthirapuram Church celebrated its 26th anniversary with a special service welcoming eighteen new communicant members. The service was beautifully led by Rev. A.S. Thevagunananthan, chairperson of the CACM and Rev. P. Santhirasekar, parish priest.
Members from the Visvamadu and Jeyapuram churches joined the celebration and participated in the ceremony.
The new communicant members from Suthanthirapuram Church are Arulpiragasam Yogeshwary, Uthayakumar Lojan, Suppiah Vaithi, Sivalingam Philipkumar, Prabanatham Sasikala, Nadarasa Nalini, Vijayakumar Kokilavani, Kunaseelan Tharshini, Sivakumar Niranjana, Thulasimaaran Puhalarisi, Singaravel Kanagaraj.
The Visvamadu church welcomed two new members Emanuel Nilrukshan and Kumar Puhaliniyan.From the Jeyapuram Church, Vellayan Linganthan, Kuganeswaran Selvaroshanthy, Balasubramaniam Sam, Jeyakumar Johnson and Satheeshkumar Vithusha were welcomed as new communicant members.
Rev. P. Santhirasekar and Rev. P. Thevarajah, along with Bro. John Pirakash, provided guidance and preparation for the new members’ communion. The church community extends a warm welcome to all eighteen new communicant members and wishes them continued growth in their faith.
அமெரிக்கன் சிலோன் மிசன் சுதந்திரபுரம் திருச்சபையின் 26ஆவது ஆண்டு விழாவானது விசுவாசப்பயணத்தின் வழியாக கிறிஸ்துவின் பலத்தோடு அத்திருச்சபை மக்களாக ஒன்றிணைந்து திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் போதகர் ஐயா அவர்களின் தலைமையிலும் மற்றும் சுதந்திரபுரம் திருச்சபையின் ஊழியன் அருட்பணி. பி. சந்திரசேகர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் இறைவழிபாட்டுடன் ஆரம்பமாகி, அழகுற நடைபெற்றது.
மேலும் இந்த ஆண்டுவிழாவின் தினத்தோடு இன்னும் அதைப் புதுப்பிக்கும் வகையில் ஜெயபுரம், விசுவமடு ஆகிய திருச்சபைகளும் இணைந்து தம் திருச்சபை அங்கத்தவர்களை முழு திருச்சபை அங்கத்தவர்களாக இணைக்க கை கோர்த்தனர். சுதந்திரபுரம் திருச்சபை அன்பர்களான அருள்பிரகாசம் யோகேஸ்வரி, உதயகுமார் லோஜன், சுப்பையா வைத்தி, சிவலிங்கம் பிலிப்குமார், பிரபானந்தம் சசிகலா, நடராசா நளினி, விஜயகுமார் கோகிலாவாணி, குணசீலன் தர்சினி, சிவகுமார் நிரஞ்சனா, துளசிமாறன் புகழரசி, சிங்கரவேல் கனகராஜா ஆகியோரும் விசுவமடுத் திருச்சபை அன்பர்களான இம்மானுவேல் நில்ருக்சன் மற்றும் குமார் புகழின்பன் ஆகியோரும் மற்றும் ஜெயபுரம் திருச்சபை அன்பர்களான வெள்ளையன் லிங்கநாதன், குகனேஸ்வரன் செல்வரோஷந்தி, பாலசுப்ரமணியம் சாம், ஜெயக்குமார் ஜோன்சன் சேதீஷ்குமார் விதுசா ஆகியோரும் திருமறை அறைகூவலின் அடிப்படையிலும் தகுந்த நெறிமுறைப்படுத்தலோடும் அதனை பூர்த்தியாகும் வகையில் திருச்சபையின் தலைவரால் திடப்படுத்தல் பெற்றனர். அருட்பணி. பி. சந்திரசேகர், அருட்பணி. பி. தேவராஜா மற்றும் அருட்சகோதரன் ஜோன் பிரகாஷ், ஆகியோர் இவர்களை வழிப்படுத்தியிருந்தனர்.
திடப்படுத்தல் பெற்ற 18 இறை விசுவாசிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு உங்களோடு இறையாசி இருக்கவும் மன்றாடுகிறோம்