A joyous celebration of Christmas took place on December 14th, 2024, at 9:00 am in the Killinochchi cooperative hall. Priests and church members from the churches across the Vanni region gathered for a combined carol service and program. The event was filled with songs celebrating the birth of Jesus Christ, and each church contributed a unique group dance, adding a vibrant and festive touch to the occasion.
அமெரிக்கன் சிலோன் மிசன் வன்னிப் பிராந்தியத் திருச்சபைகளின் ஒருங்கிணைந்த இறை இராக இணைப்பில் இன்னிசை வழிபாடும் கலை நிகழ்வுகளும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 14.12.2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இறைபிரசன்னத்தின் ஆளுகையில் சிறப்புற நடைபெற்றது.
அன்பின் பகிர்வில் அருட்பணியாளர்களாவும், விசுவாச சமூகமாகவும் பிராந்தியத்திருச்சபைகள் இணைந்து, பாலன் இயேசுவின் வருகையை இன்னிசையாய் இயம்பியதோடு, தங்கள் குழு நடனத்தின் வழியாகவும் திருச்சபை தம் தம் நெறியாளுகையின் வழியாகவும் மார்கழி மகவின் பிறப்பின் மகிழ்வை பறைசாற்றி மகிழ்ந்தனர்.