The Church of the American Ceylon Mission Religious Board organized a seminar for students preparing to write the Ordinary Level Examination this March. The event took place on Wednesday, February 12, 2025, from 9:00 AM to 1:30 PM at the Christian Theological Seminary in Maruthanarmadam. The seminar commenced with a prayer led by the Regional Minister, Rev. M.D. Paul Suresh. Mrs. Sunitha Ravilincolin and Mrs. Jenilucksiya Sujanthan, both experienced teachers, served as resource persons and provided valuable guidance on effectively answering past papers from previous years.
A total of 40 students participated in the seminar, including 12 children from the church and 27 students from various schools such as Angel International School, St. John’s College, Chundikuli Girls College, Skandavarodhaya College, Ranamanthan College, Manipay Hindu Ladies College, and Santhirapura Skandavarodhaya College. The seminar concluded at 1:30 PM with a closing prayer offered by Rev. S. Suthasini, the Jaffna Regional Coordinator of the Religious Board.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை சமயக் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கிறிஸ்தவ பாட நெறிக்கான கருத்தரங்கு 12.02.2025 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 01:30 மணி வரை மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது. யாழ் பிராந்திய குரு முதல்வர் அருட்பணி. எம்.டி. போல் சுரேஸ் அவர்களின் ஆரம்ப ஜெபத்துடன் இக் கருத்தரங்கு ஆரம்பமானது.
திருமதி. சுயிதா ரவிலின்கோலின் மற்றும் திருமதி. மேரி ஜென்லக்ஸியா சுஜாநாதன் ஆகிய இருவரும் ஆசிரிய வளவாளராக கலந்துகொண்டு இக் கருத்தரங்கை சிறப்பாக நடத்தினார்கள். கடந்த கால வினாத் தாள்களில் இருந்து எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் ஆசிரியர்கள் இந்தக் கருத்தமர்வை சிறப்பாக நடத்தினார்கள்.
இதில் எமது திருச்சபை சேர்ந்த 13 மாணவர்களுடன் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சென்.யோன்ஸ் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யா/ஸ்கந்தவரோதயா கல்லூரி, யா/இராமநாதன் கல்லூரி, யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி, யா/சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 27 மாணவர்கள் என மொத்தம் 40 மாணவர்கள் இக் கருத்தரங்கில் பங்குபெற்றார்கள்.
யாழ் பிராந்திய சமயக் கல்விக் குழு இணைப்பாளர் அருட்பணி. சுதாசினி சுதாகரனுடைய, ஜெபத்துடன் இக் கருத்தரங்கானது நிறைவுபெற்றது.