Despite challenging weather conditions, the American Ceylon Mission Central Youth Board successfully hosted an inter-regional sports day on November 16th, 2024, at the Killinochchi Public Grounds. The event saw fierce competition among youth teams from Vanni, Jaffna, and Colombo-Upcountry regions in cricket, volleyball, and netball.
The Wanni Region Youth Team emerged victorious in the cricket tournament, with Jaffna as the first runner-up and Colombo-Upcountry securing the second position. In volleyball, the Colombo-Upcountry team claimed the championship, while Jaffna and Wanni followed. The Jaffna Region Youth Team dominated the women's netball competition, with Wanni as the runner-up.
Individual awards were also presented to outstanding players. Kajenthiran Williams Moses from the Wanni team received the Best Batsman award in cricket, while Pararajasingam Sharon Joshua from Jaffna region was recognized as the All-Rounder. V. Victor from Colombo-Upcountry was awarded the Best Player in men's volleyball, and KanagalingamKajila from Jaffna was honored as the Best Player in women's netball.
The event was made possible through the dedicated efforts of Rev. M. Jeyanantharasa, the Youth Board Coordinator. Trophies and certificates were awarded to the winning teams by the Vanni regional chairperson Rev. R. Johnselvam, Parish priest of Karainagar church Rev. S. Suthaayini, St. Jacob Church Samaathanapuram's parish priest Rev. S. Susenthan and Rev. N. Gangaprasath parish priest of St. Andrew's church Udapusalaava and the coordinator of the Youth board Rev. M. Jeyanantharasa.
விளையாட்டின் வழியாக வாலிபர்களது ஆளுமையின் உத்வேகத்தை வலுப்படுத்தும் நோக்குடன் 16.11.2024 சனிக்கிழமை அன்று அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபப்பணியானது, பிராந்தியவாலிபர்களை ஒன்றிணைத்து புதிய ஆடுகளத்தை நோக்கிப் பயணிக்கச்செய்தது. அந்தவகையில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபர்பணி இணைப்பாளர் அருட்பணி.எம்.ஜெயானந்தராசா அவர்களின் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுக்களம் ஒன்று பன்முகப்படுத்தப்பட்டது. மேலும் பிராந்திய வாலிபருக்கிடையில் ஏற்பாடுசெய்யப்பட்ட துடுப்பாட்டம்,கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் என்பன சுற்றுப்போட்டிகளாக இயற்கையின் சவால்களில் மத்தியிலும் கிளிநொச்சி பொதுவிளையாட்டரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.
இதில் துடுப்பாட்டப் போட்டியில் வன்னிப் பிராந்திய வாலிபர் அணி முதலாம் இடத்தினையும் யாழ்பிராந்திய வாலிபர்அணி இரண்டாம் இடத்தினையும் கொழும்பு மற்றும் மலையகப்பிராந்திய வாலிபர்அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டதோடு, தொடர்ந்து நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு மற்றும் மலையகப் பிராந்திய வாலிபர் அணி முதல் இடத்தினையும் யாழ் பிராந்திய வாலிபர் அணி இரண்டாம் இடத்தினையும் வன்னிப்பிராந்திய வாலிபர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். அதேவேளை பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்பிராந்தி யவாலிபர் அணிமுதலாம் இடத்தையும் வன்னிப் பிராந்திய அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டதோடு வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் இந்த விளையாட்டுகளைச் சிறப்புற எதிர்கொண்ட வாலிப வீரவீராங்கனைகளுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக வன்னி பிராந்தியத்தைச் சேர்ந்த திரு.கஜேந்திரன் வில்லியம்ஸ் மோசெஸ் அவர்களும் ஆட்டநாயகன் விருதை திரு.செல்வராசா சிறிகரன் அவர்களும் சிறந்த பந்துவீச்சாளராக யாழ் பிராந்தியத்தைச் சேர்ந்த திரு.பாலசிங்கம் ஷாரோன் யோசுவா அவர்களும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். ஆடவருக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சிறந்த வீரராகக் கொழும்பு மற்றும் மலையகம் பிராந்தியத்தைச் சேர்ந்த திரு.வி.விக்டர் அவர்களும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ் பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வி. கனகலிங்கம் கஜிலா அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
வன்னிபிராந்திய குரு முதல்வர் அருட்பணி ஆர். ஜோன்செல்வம் அவர்களும் காரைநகர் திருச்சபையின் ஊழியர் அருட்பணி. எஸ்.சுதாஜினி அவர்களும் தூய யாக்கோபு ஆலயம், சமாதானபுரம் திருச்சபையின் ஊழியன் அருட்பணி .ரி. சுசேந்தன் அவர்களும் தூய அந்திரேயா ஆலயம், உடப்புசல்லாவத் திருச்சபை ஊழியன் அருட்பணி. என். கங்காபிரசாத் அவர்களும் மற்றும் இவர்களோடு அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபர் இணைப்பாளர் அருட்பணி. எம். ஜெயானந்தராசாஅவர்களும் வெற்றிக் கேடயங்களை, மகுடங்களை வழங்கி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இணைப்பாளர் அருட்பணி. எம். ஜெயானந்தராசா அவர்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்க உதவி செய்தவர்களுக்கும் போட்டியினை நடத்தித் துணை நின்றவர்களுக்கும் குறிப்பாக அருட்பணியாளர்கள், அனைத்துப் பிராந்திய வாலிபர் இணைப்பாளர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட வாலிபர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.