The Church of the American Ceylon Mission has consistently held annual leadership camps for the past three years, fostering the growth and development of its youth. In 2022, the camp commenced in Batticaloa with 30 participants, followed by Nuwaraeliya in 2023. This year, from October 11th to 13th, the camp convened at Poovarasankulam, bringing together approximately 30 youth, both veterans and newcomers.
The camp commenced on the evening of the 11th with a Bible study on "Modernism and Post-Modernism that Influence Leadership" conducted by Rev. David Nirushikan. This was followed by sessions on "Worker's Leadership" by the CACM Chairperson of the CACM Rev. A.S. Thevagunananthan, “The Leadership of Christ” were conducted by Rev. R. John Selvam and "Leadership of Christian Families" by Rev. M. Jayanandarasa. Mr. J. Kalingdas and Mr. S. Thanujan enlivened the camp with engaging games and songs.
A unique highlight of this year's camp was the active involvement of the youth themselves in organizing and conducting the event, showcasing their leadership skills and initiative. The camp culminated with the youth formulating plans for future endeavors, including the establishment of an Arts and Cultural Group to support evangelical meetings and services, the creation of a WhatsApp group for enhanced communication and collaboration and the implementation of online Bible studies and prayer sessions via Zoom. Furthermore, the youth expressed their intention to coordinate with youth groups across different regions. The leadership camp serves as a valuable platform for youth empowerment, equipping them with the necessary skills and knowledge to actively contribute to the growth and development of the CACM and their communities.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபர் பணியின் ஏற்பாட்டில் கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியானது தொடர்ந்து மூன்று வருடங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு 30 பேர் கொண்ட தலைமைத்துவ பயிற்சி முகாம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு நுவரெலியாவில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. 2024இல் வவுனியாவில் உள்ள பூவரசங்குளத்தில் கடந்த 11, 12 மற்றும் 13.10.2024 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில் பழைய வாலிபருடன் புதிய வாலிபர்களும் இணைந்து சுமார் 30 பேர் பங்கு கொண்டனர்.
பதினோராம் திகதி வெள்ளி மாலை ஆரம்பிக்கப்பட்ட இப்பட்டறையில் “தலைமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தும் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும்” என்ற பொருளில்அருட்பணி. டேவிட் நிருஷிகன் அவர்களும் “பணியாளர் தலைமைத்தும்” என்ற தலைப்பில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களும் “கிறிஸ்துவின் தலைமைத்துவம்” என்ற பொருளில் அருட்பணி ஆர். ஜோன் செல்வம் அவர்களும் “கிறிஸ்தவ குடும்ப தலைமைத்துவம்” எனும் பொருளில் அருட்பணி. எம். ஜெயானந்தராசா அவர்களும் பட்டறைகளை நடத்தினர். இதன்போது விளையாட்டுக்கள் மற்றும் பாடல்கள் ஆகியனவற்றினை திரு. ஜே. கலிங்டஸ் மற்றும் திரு. எஸ். தனுஜன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தம்முடைய எதிர்காலப் பணிகளைச் செய்வதற்குத் திட்டமிட்டனர். வாலிபர்களாகக் “கலை பண்பாட்டு குழு” ஒன்றினை அமைத்து திருச்சபையில் நற்செய்திப் பணி மற்றும் வழிபாடுகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றோடு, ஓர் பொதுவான “வாட்ஸ் அப் குரூப்” ஒன்றினை ஆரம்பித்து, அதன் வழியாக வாலிபர்கள் அவர்களது துன்பங்களிலும் மகிழ்விலும் இணைந்திருத்தல். Zoom வழியாகத் திருமறைப் படிப்பு மற்றும் செப தியானங்கள் ஏற்படுத்தல். ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள வாலிபர்களை ஒன்றிணைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளல் ஆகிய திட்டங்கள் தீட்டப்பட்டன.
இம்மூன்று வருடங்களிலும் தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் உதவியுடன் எதிர்காலத்தில் வாலிபர் பணியினை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வருடப் பயிற்சிப்பட்டறையில் முழுக்கமுழுக்க வாலிபர்களே அனைத்து தலைமைத்துவத்தினை ஏற்று மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடப்படவேண்டிய ஒரு அம்சமாகும்.