In the spirit of Christian unity and inspired by John 17:21—"That they all may be one"—the Christian Theological Seminary of Sri Lanka and St. Xavier Catholic Seminary came together to organize a meaningful event. The gathering was held at St. Xavier College and began at 3:00 PM with a heartfelt worship service.
The central theme of the discussion was "What Can We Do to Promote Cooperation in Contemporary Society?" Lecturers, staff, and students from both institutions, totaling around 50 participants, engaged in a thoughtful and inspiring conversation.
To further strengthen the bonds of fellowship, a friendly volleyball match was organized. All participants joyfully celebrated their shared faith and unity in Christ.
“பிதாவே நீரும் நானும் ஒன்றாயிருப்பது போல இவர்கள் எல்லோரும் ஒன்றித்து இருப்பார்களாக” (யோவான் 17) என்று ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறும் வார்த்தைக்கு அமைவாகவும் ஓர் எடுகோளாகவும் மருதனார்மடம், கிறிஸ்தவ இறையியற் கல்லூரியும் யாழ் புனித சவேரியார் கத்தோலிக்க இறையியல் கல்லூரியும் இணைந்து ஓர் ஒன்றிப்பு ரீதியிலான உரையாடல் ஒன்றினை இரு கல்லூரிகளுக்குமிடையே ஏற்பாடு செய்திருந்தனர். இந்த உரையாடலானது புனித சவேரியார் கல்லூரியில் மாலை 3:00 மணியளவில் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
ஒவ்வொருவரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகி, “இன்றைய காலத்தில் ஒருமைப்பாட்டினை வளர்த்துக் கொள்வதற்கு நாம் என்ன செய்யலாம்” என்ற கருத்தியல் வழியாக கலந்துரையாடப்பட்டது. இதில் விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளடங்கலாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு எம் ஐக்கிய பகிர்வை இன்னும் வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் கரப்பந்தாட்டம் விளையாட்டிலும் ஈடுபட்டு நட்பின் ஒன்றிப்பை இறையன்புடன் பகிர்ந்து கொண்டனர்.