A group of eleven (11) lecturers from Tamil Nadu Theological Seminary led by their Principal Dr. Margaret Kalaichelvi visited Christian Theological Seminary of Sri lanka On 05th of January 2024. As both the institutions have a long-standing relationship, this visit has aimed to strengthen the bond between them by discussing new collaborative projects. The proposed Initiatives were the continuous Student and Faculty exchange programs. Ministers from our church who were the alumni of Tamil Nadu Theological seminary also participated in the discussions. The Tamil Nadu Theological seminary delegation stayed at Christian Theological seminary of sri lanka for three days, met and interacted with the leaders of the churches and visited many places in Jaffna and Vanni. Based on that Tamil Nadu Theological Seminary delegation has pledged their full support and assistance to Christian Theological seminary of Sri lanka.
05.01.2024 அன்று தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் இருந்து அதன் அதிபர் அருட் கலாநிதி மார்க்கிரட் கலைச்செல்வி அவர்களின் தலைமையில் பதினொரு (11) விரிவுரையாளர்கள் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு வருகை தந்தார்கள்.
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கும், தமிழ்நாடு இறையியல் கல்லூரிக்கும் நீண்ட காலத் தொடர்பு இருப்பதன் அடிப்படையில் அத்தொடர்பை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் புதிய பல திட்டங்களை செயற்படுத்துவதற்கான, கலந்துரையாடலுக்காக இவர்கள் வருகை தந்திருந்தார்கள். இதில் குறிப்பாக மாணவர்களின பரிமாற்றமும் விரிவுரையாளர்களின் பரிமாற்றமும் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்கின்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. கலந்துரை யாடலின்போது தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கல்வி பயின்ற எம் திருச்சபையின் அருட்பணியாளர்களும் இதிலே கலந்து கொண்டார்கள்.
மூன்று நாட்கள் எம் இறையியல் கல்லூரியில் தங்கியிருந்த இவர்கள் திருச்சபைகளின் தலைவர்களையும் சந்தித்து உரையாடியதோடு யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருக்கின்ற பல இடங்களை பார்வையிட்டார்கள். அதன் அடிப்படையில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு முழு ஆதரவையும், உதவியையும் நல்குவோம் என்ற உறுதிப்பாட்டையும் தந்திருந்தார்கள்.