Celebrated forty years of ministry in Theological Education in October the 28th commencing at 9.30 am with a Service of Praise and Thanksgiving led by its Principal, Rev A Kamalakumaran, and the Chairperson of the Church of the American Ceylon Mission, Rev A S Thevagunananthan at the Seminary Conference Room. Participation of the students, lecturers in parts of the worship, in addition to the Homily delivered by Rev Fr P J Jebaratnam from the Catholic Diocese of Jaffna added the spirit of solemnity.
This was followed by the Choir singing the College Song, dignitaries represented various Churches and Seminaries greeted the gathering with their special messages direct, via letters and zoom. A friendly Volley Ball match was played between the CTS students and CTS alumni.
On the previous day, the 27th Oct. ‘23 a series of talks given by the CACM Chairperson on the ‘history of CTS and its needs’ followed by Prof. Niyenthini Kadirgamar on ‘Ministry from Feminist Perspective’ and a well known Political Commentator, Mr Nilaanthan spoke on ‘Ministry from a Political View’, and concluded with a talk by Rev. Fr. Dr. Raviraj ‘Theologising the above’- all of which were well received with questions from the audience.
The events on both days lifted the spirits of all, including the Church dignitaries and Seminary communities of the island nation.
கிறிஸ்தவ இறையியற் கல்லூரியின் 40 வது ஆண்டு விழா 28.10.2023 ஆம் திகதி அன்று நடைபெற்றது. காலை 09:30 மணியளவில் கேட்போர் கூடத்தில் நன்றிசெலுத்தும் வழிபாட்டினை மிகச் சிறப்பான முறையில் கல்லூரியின் முதல்வர் அருட்பணி. ஏ. கமலகுமாரன் அவர்களின் தலைமையில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் தலைவர் அருட்பணி ஏ. எஸ். தேவ குணானந்தன் அவர்களும் இணைந்து முன்னெடுத்தனர். இவ்வழிபாட்டில் இறையியற் கல்லூரியின் விரிவுரை யாளர்கள் மற்றும் மாணவர்களால் ஜெபங்கள், விசேட பாடல்கள், திருமறை வாசகங்கள் என்பன முன்னெடுக் கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்டத்தின் அருள்தந்தை பி. ஜே. ஜெபரட்ணம் அவர்கள் இறைசெய்தியை பகிர்ந்து கொண்டார்.
வழிபாட்டினை தொடர்ந்து கல்லூரிக்கீதம் கல்லூரி மாணவர்களால் இசைக்கப்பட்டு பின்னர் வாழ்த்துரைகள் நேரடியாகவும், காணொளி வழியாகவும், கடிதங்கள் ஊடாகவும் பகிரப்பட்டன. சுமார் 01.30 மணியளவில் மதிய ஐக்கியவிருந்து வழங்ப்பட்டது. மாலை 03.00 மணியளவில் கிறிஸ்தவ இறையியற் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கும், கல்லூரியின் மாணவர்களுக்கும் இடையிலான நட்பு ரீதியான கரப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
கிறிஸ்தவ இறையியற் கல்லூரி யின் 40 வது ஆண்டு விழாவையொட்டி 27 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் இறை சிந்தனைகள் ஆய்வு கள் என பலரால் நிகழ்த்தப்பட்டன. இதில் கிறிஸ்தவ இறையியற் கல்லூரி யின் வரலாற்றையும், அதன் பின்னணி தேவைகள் என்ற தலைப்பில் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் நியேந்தினி கதிர்காமர் அவர்கள் பெண்ணிய பார்வையிலே இறையியற் பணி என்ற பொருளிலும், திரு. நிலாந்தன் அவர்கள் அரசியல் பார்வையில் இறைபணி குறித்தும் உரையாற்றினார்கள். இறுதியில் அருட்தந்தை கலாநிதி. ரவிராஜ் அவர்கள் இவைகளை இறையிலாக்கம் செய்தும் சிறப்பாக உரையாற்றினார். பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட சிலராலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.