On December 14, 2024, at 3:00 PM, the Christian Theological Seminary of Sri Lanka hosted a carol service titled "Intense Grief – An Act of Love." The event, a testament to the seminary's commitment to social awareness, featured original songs composed by students and faculty, set to music by Mrs. Clara Arulanantham. Under her expert guidance, the CTS Choir delivered moving renditions, each song reflecting on contemporary societal challenges.
The service commenced with the traditional lighting of the oil lamp. The sermon was delivered by Rev. Fr. Jegan, a respected figure from the Roman Catholic Church of Charty St. Mary's and a lecturer at both Jaffna University and St. Xavier Seminary.
The carol service was graced by the presence of esteemed guests, including priests, sisters, and members from various Christian denominations across Jaffna. The hall overflowed with attendees, creating a vibrant and supportive atmosphere.
கடந்த 14.12.2024 சனி மாலை 03.00 மணிக்கு "Intense Grief – An Act of Love." என்னும் தலைப்பில் இறைமகன் வருகை இன்னிசை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களும் விரிவுரையாளர்களும் இணைந்து காலத்துக்கேற்ற இறையியல் அர்த்தம் நிறைந்த இனிமைமிகு பாடல்களைத் தாமே இயற்றி, நெறியாளுகைக் கலைஞர் செல்வி. கிளேரா அருளானந்தம் அவர்களுடன் இணைந்து பாடல்களுக்கான மெட்டையும் அமைத்திருந்தனர்.
ஒளியேற்றலுடன் ஆரம்பமான இவ்வாராதனை அறிவித்தல்களின்றி அமைதியாகவும் அர்த்தமுள்ளதாகவும் நடந்தேறியது. இவ்வழிபாட்டில் இறைசெய்தியினை உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சாட்டிமாதா கோயிலின் பங்குத்தந்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் புனித சேவியர் குருத்துவக் கல்லூரி என்பவைகளின் விரிவரையாளருமான அருட்தந்தை ஜெகன் அடிகளார் பகிர்ந்துகொண்டார். யாழ் குடாநாட்டில் உள்ள பல்வேறு திருச்சபைகளின் குருமார், அருட்சகோதரிகள், விசுவாசிகள், நண்பர்களென மண்டபம் நிறைந்தோர் மனமகிழ்வுடன் இவ்வழிபாட்டில் கலந்து இறையாசியினைப் பெற்றுக்கொண்டனர்.