In response to the numerous challenges faced in today's society, a significant seminar was organized under the leadership of Dr. Thamayanthy Niles (USA) and hosted by the Christian Theological Seminary of Sri Lanka. The event took place in the seminary's auditorium from 9:00 AM to 1:00 PM over the course of eight days, focusing on critical issues affecting the Church and society.
The seminar was structured into three key themes. From the 29th to the 31st, the focus was on the Challenges of Women in Church Ministry. From the 3rd to the 5th, the seminar shifted to the theme of The Church's Role in Gender and Sexuality. The final sessions, held on the 7th and 8th, focused on Layperson Church Work. More than 30 participants attended the seminar.
இன்றையகால சமூகத்தில் திருச்சபைக்குள்ளும் வெளியிலும் அநேகமான இடர்களையும் சவால்களையும் தினம் தினம் நாம் சந்திக்கின்றோம். அதனடிப்படையில் இவ்வாறான கருத்துக்களங்களைக் கொண்ட கருத்தரங்கு ஒன்று எல்லோரும் பயன்பெறும் வகையில் வளவாளர் டாக்டர். தமயந்தி நைல்ஸ் அவர்களின் நெறியாளுகையில் மருதானர்மடம், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி சமூகத்தின் ஒருங்கிணைப்பில் கேட்போர் கூடத்தில் காலை 09.00 மணிமுதல் 01.00 மணிவரையில் நடைபெற்றன.
அந்தவகையில் ஜனவரி 29, 30, 31 ஆகிய தினங்களில் திருச்சபைப் பணியில் பெண்களுக்கு இருக்கின்ற சவால்களைக் குறித்தும், பெப்ரவரி 03, 04, 05 ஆகிய தினங்களில் பாலினம் மற்றும் பாலியல் குறித்து திருச்சபைப் பணி என்ன என்பதைப் பற்றியும் பெப்ரவரி 07, 08 ஆகியதினங்களில் பொதுநிலையாளர்களின் திருச்சபைப் பணி என்ன என்பதையும் பற்றியும் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்றன. மேலும் குறித்த கருத்தரங்குகளில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.