யாரும் எதிர்பாராத வண்ணம் கர்த்தருக்குள் நித்திரை அடைந்த அருட்பணி. ஜெகநாதன் அன்ரனி சுதாகர் அவர்களது நல்லடக்க வழிபாட்டில் அன்பின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பன்நூற்றுக்கணக்கானோர் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்து பங்கு பற்றி தமது அன்பை வெளிப்படுத்தினர்.
28.01.2025 அன்று கர்த்தருக்குள் நித்திரை யடைந்த அருட்பணி. ஜெகநாதன் அன்ரனி சுதாகர் அவர்களது நல்லடக்க வழிபாடு 02.02.2025 அன்று நவாலி, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் தேவாலயத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நடந்தேறியது. அருட்பணி. அன்ரனி சுதாகர் அவர்களது நல்லடக்க வழிபாட்டின் தொடக்கமாக, அருள் கலாநிதி பி. ராஜன் றொகான் (கொழும்பு மற்றும் மலையகப் பிராந்தியத் தலைவர்) மற்றும் அருட்பணி. ஏ. கமலகுமாரன் (முதல்வர், CTS) ஆகியோர் இணைந்து நயப்புரைகளை வழிநடாத்தினர். அந்தவகையில் திரு. ஆனந்தரூபன் (குடத்தனை திருச்சபை), திரு. விமலலேஸ்சன் (பழைய மாணவன்), திரு. சுகுமாறன் மற்றும் திரு. மாறாவர்மன் (பெரியநீலாவனை திருச்சபை), திரு. உதயன் (நண்பன்), திரு. பால்ராஜ் (நகர்பணி திருச்சபை), அருட்பணி. டி. எஸ். மதியாபரணம் (மானிப்பாய் திருச்சபை), அருட்பணி. எஸ். மில்டன் (மூத்த ஊழியன்) ஆகியோரும் அஞ்சலுடாக அருட்பணி. எஸ். ஜெயநேசன் (திருச்சபை முன்னாள் தலைவர்), அருட்பணி. ஏ. ஜெயகுமாரன் (திருச்சபை முன்னாள் தலைவர்), கலாநிதி. சரத் கோஷி (UCC), கலாநிதி. டேவிட் செல்வராஜ் (விஸ்தார் இயக்குநர்) மற்றும் Pastor Sarah Frische-Mouri Hannigan (Chairperson, IKC) ஆகியோர் தங்கள் நயப்புரைகளை பகிர்ந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மதியம் 01.30 மணியளவில் நல்லடக்க வழிபாடு ஆரம்பமானது. அருட்பணி. ஏ. பி. தேவதாஸ் (திருச்சபை செயலாளர்) வணக்க அழைப்பிலும் அருட்பணி. பி. தேவமித்திரன் தேவாரத்திலும் வழிநடாத்த, அருட்பணி. ஏ. எஸ். ஸ்டீபன் (இலங்கைத் திருச்சபை) ஆரம்ப இறைவேண்டலிலும், அருட்பணி. வை. நிவில் ரூபராஜ் (கிழக்கு பிராந்தியம்) ஆறுதல் தரும் இறைவசனங்களிலும் லழிநடாத்தினர். திருப்பாடல் 90இல் அருட்பணி. எஸ். லிங்கேஸ்வரன் (தென்னிந்திய திருச்சபை) அவர்கள் வழிநடாத்தினார். தொடர்ந்து, திரு. பி. தியாகலிங்கம் (குடும்பம் சார்பாக), திரு. எஸ். டிலான் (நவாலி திருச்சபை சார்பாக)இ அருட்பணி. எம். டி. போல்சுரேஸ் (அருட்பணியாளர் சார்பாக), கலாநிதி. தமயந்தி நைல்ஸ் (சர்வதேச நண்பர்கள் சார்பாக) ஆகியோர் நயப்புரைகளை நவின்றனர். தொடர்ந்து இறைவேண்டல்களை ஜெரோம் அண்ணன் (கிறிஸ்தவ சேவ ஆச்சிரமம்) மற்றும் அருட்பணி. ஜே. ஞானரூபன் (மெதடிஸ்த திருச்சபை) அவர்களும் முன்னெடுத்தனர்.
அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் (திருச்சபைத் தலைவர்) அவர்களின் ஆறுதல் தரும் இறைசெய்தியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் குடும்பத்தினரின் விசேட பாடல் பாடினர். அருட்பணி. ஆர். ஜோன் செல்வம் (வன்னிப் பிராந்தியம்) அவர்களின் இறைவேண்டல் செய்தார். திரு. ஜே. ஞானசீலன் (இளையசகோதரன்) அவர்கள் நன்றியுரை நவின்றார். அருட்பணி. ரி. தேவநேசன் (முன்னாள் திருச்சபைத் தலைவர்) இறுதி ஜெபத்தை ஏறெடுக்க அருட்பணி. ஏ. எஸ் தேவகுணானந்தன் (திருச்சபைத் தலைவர்) அவர்கள் இறையாசி நல்கினார். தொடர்ந்து எண்ணிறைந்த மக்கள் கூட்டத்தினரின் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் சக அருட்பணியாளர்களும் அடியான் பணியாற்றிய திருச்சபை விசுவாசிகளும், குடும்ப உறுப்பினகளும், நண்பர்களும் மற்றும் வாலிபர்களும்; தாசன் அன்ரனியின் உடலை நீண்ட தூரம் சுமந்து சென்று அன்னாரின் தாய்த் திருச்சபையான மானிப்பாய்த் திருச்சபைக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து அத்திருச்சபை ஊழியர் அருட்பணி. டி. எஸ். மதியாபரணம் அவர்கள் அன்ரனி குறித்தான சாடசிய அன்பு நிறைந்த பகிர்வின் வெளிப்பாட்டோடும், இறை ஜெபத்தோடும் தாசனை தாய் திருச்சபையிலிருந்து வழியனுப்பி மீண்டும் அடியாரின் இறுதிப் பயணத்தை முழமையாக்கிக்கொள்ள மானிப்பாய் கல்லறைத் தோட்டத்தை நோக்கி தாசனை வாலிப விசுவாசத் தோல்கள் சுமந்து சென்றன.
தொடர்ந்தும் மக்கள் கூட்டம் புடைசூழ அருட்பணி. டி. எஸ். மதியாபரணம், அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன், அருட்பணி. ரி. தேவநேசன் அவர்களும் ஒன்றிணைந்தவர்களாய் இறுதித் தருணத்திற்காய் சபையோடு சேர்ந்து இறைஜெபத்தோடும் இறையுணர்வோடும் அடியானின் குடும்பத்தாரை தேற்றியவர்களாய் அவர்களோடு இணைந்து அருட்பணி. ஜெ. அன்டனி சுதாகர் அவர்களின் சரீரத்தை சோதி தோன்றும் ஓர் தேசமுண்டு விசுவாசக் கண்ணாற் காண்கிறோம்: நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்க செல்லுவோம் என்ற விசுவாச ஒப்படைப்போடு மாலை 06.00 மணியளவில் மண்ணுக்குள் வித்துடலாய் விதைக்கப்பட்டார்.
அடியானின் இந்த வழிபாடு பெருந்திரளான மக்கள் மத்தியில் சாட்சியுடன் சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.