On November 25th, 2023, a momentous occasion unfolded at the historic church in Tellippalai, Sri Lanka. Church of the American Ceylon Mission Church (CACM) witnessed the ordination of five young priests, heralding a significant milestone in its history. Nestled within the ancient walls of a church originally erected by the Portuguese, later restored by the Dutch, and finally refurbished by the CACM in 2016, this 207-year-old sanctuary provided the perfect backdrop for an unforgettable occasion, harkening back to the missionary endeavors that first planted seeds of faith in the Thellipalai mission field.
Of particular note was the orientation of three women – Suthayini Sudhakar (Karainagar), Kalaavathi Pradeepan (Kalmadu&Maravankulam), and Biyoora Selvakumar (Murakottanchenai) – alongside their male counterparts, Thangadurai Susandan (Samaathanapuram) and Chinnathambi Daniel Selvakumar (Kithul Thumbalancholai). Notably, two of the ordained women hail from female-headed families, and one couple shares a bond of marrige. This event marked a proud moment for the CACM, etching their steps in history.
Each of the newly ordained priests embarked on their journey to ministry after completing rigorous theological studies at prestigious institutions such as Christian Theological Seminary of Sri Lanka, Serampore Theological College in West Bengal, and the United Theological Seminary of Philippines. Their four years of dedicated studies prepared them for their new roles as spiritual leaders.
The service commenced with a procession of priests, led by the chairperson Rev. A. S. Thevagunananthan and secretary Rev. A. B. Thevathas. Parish priest of Thellipalai church Rev. T. E. Ashokumar, former chairperson Rev. T. Thevanesan and the former secretary Rev. J. Antony Suthagar, principal of Christian Theological Seminary Rev. A. Kamalakumaran, Regional chairpersons Rev. M. D. Paul Suresh and Rev. M. Luke John all participated in presenting the soon-to-be ordained priests. Rev. A. S. Thevagunananthan himself delivered an inspiring sermon, adding a spiritual dimension to the ceremony.
The ambiance was further elevated by a heartfelt musical rendition from students of Christian Theological Seminary of Sri Lanka, invoking the presence of the Holy Spirit and adding a transcendent quality to the proceedings. Under the meticulous guidance of Jaffna Regional Chairperson Rev. M. D. Paul Suresh and Dean of Students Rev. J. Gnanapiragasam, the preparations unfolded seamlessly, ensuring a poignant and meaningful ceremony befitting the occasion.
Over four hundred devotees from across the country gathered to witness this historic ordination. The atmosphere was filled with joy and wishes as the newly ordained priests received garlands and tokens of appreciation from the congregation. This event not only marked the beginning of a new chapter for the five priests but also solidified the CACM's unwavering commitment to inclusivity and spiritual growth, cementing its place in the annals of history.
கடந்த நவம்பர் மாதம் 25ம் திகதி மாலை 02:30 மணிக்கு சி.ஏ.சி.எம் திருச்சபையில் பணியாற்றி வரும் ஐந்து இளம் அருட்பணியாளர்கள் திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களால் குருமாராக அருட்பொழிவினைப் பெற்றுக் கொண்டனர். அமெரிக்கன் மிசன் தொண்டர்களுடைய முதலாவது பணிக்களமான தெல்லிப்பளையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் மீளுருவாக்கப்பட்டு இறுதியில் 2016 இல் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையினரால் புனரமைப்புச் செய்யப்பட்ட அழகிய தேவாலயத்தில் ஆலயம் நிறைந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் இவ் அருட்பொழிவு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இவ் வழிபாட்டில் காரைநகர் திருச்சபையில் பணியாற்றிவரும் அருட்பணி. சுதாஜினி சுதாகர் அவர்களும் கல்மடு மறவன்குளம் திருச்சபையில் பணியாற்றிவரும் அருட்பணி. கலாவதி பிரதீபன் அவர்களும் சமாதானபுரம் திருச்சபையில் பணியாற்றிவரும் அருட்பணி. தங்கதுரை சுசேந்தன் அவர்களும் கித்துள் தும்பளாஞ்சோலை திருச்சபையில் பணியாற்றிவரும் அருட்பணி. சின்னதம்பி டானியல் செல்வகுமார் அவர்களும் முறக்கொட்டாஞ்சேனை திருச்சபையில் பணியாற்றிவரும் அருட்பணி. பியூரா செல்வகுமார் அவர்களும் அருட்பொழிவினைப் பெற்றுக் கொண்டனர்.
207 ஆண்டு வரலாறு கொண்ட இத்திருச்சபையில் மூன்று பெண்கள் ஒரே நாளில் அருட்பொழிவினைப் பெற்றுக் கொண்டனர் என்பதும் இவர்களில் இருவர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களினைத் தாங்கி வழிநடத்துவர்கள் என்பதும் மேலும் இருவர் கணவன் மனைவியாக இறைபணியாற்றுபவர்கள் என்பதும் வரலாற்றில் பதியப்படும் பெருமைதரும் விடயங்களாகும். இவர்கள் அனைவரும் நான்கு வருடங்கள் மருதனார்மடம் இறையியல் கல்லூரி மேற்கு வங்காளத்தில் உள்ள செரம்பூர் இறையியல் கல்லூரி பிலிப்பைன்ஸ் ஐக்கிய இறையியல் கல்லூரி என்பவைகளில் கற்று அரங்கேறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருட்பணியாளர்களுடைய பவனியுடன் ஆலயத்துக்குள் பிரவேசித்த பின் ஆரம்பமான இந்த திருவருட்பொழிவு வழிபாட்டினை திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் திருச்சபையின் செயலாளர் அருட்பணி. ஏ. பி. தேவதாஸ் அவர் களுடைய துணையுடன் நடாத்தினார். இவ் வழிபாட்டில் சபைக்குரு அருட்பணி ரி. ஈ. அசோக்குமார் முன்னாள் தலைவர் அருட்பணி. ரி. தேவநேசன், முன்னாள் செயலாளர் அருட்பணி. ஜே. அன்டனி சுதாகர், இறையியல் கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஏ. கமலகுமாரன், பிராந்திய குருமுதல்வர்களான அருட்பணி. எம். டி. போல் சுரேஷ் மற்றும் அருட்பணி. எம். லூக் ஜோன் ஆகியோர் அபிஷேகம் பெறுபவர்களை முன் நிறுத்தினர். இறை செய்தியினைத் திருச்சபையின் தலைவர் பகிர்ந்து கொண்டார்.
இவ் வழிபாட்டில் ஆவியானவரின் பிரசன்னத்தை வேண்டி கிறிஸ்தவ இறையியற் கல்லூரி மாணவர்களால் விசேட பாடல் பாடப்பட்டது. இவ் வழிபாட்டிற்கான ஆயத்தப் பணிகளை யாழ் பிராந்திய குருமுதல்வர் அருட்பணி. எம். டி. போல் சுரேஷ் அவர்கள் அருட்பணி. ஜே. ஞானபிரகாசம் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்தார். இவ் வழிபாட்டிற்கு நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் சுமார் நானூற்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து வழிபாட்டினை சிறப்பிதனர். அது மட்டுமன்றி அருட்பொழிவு பெற்ற அருட்பணியாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் மாலைகள் அணிவித்தும் நினைவு பரிசிலில் வழங்கியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.