In a gesture of solidarity and support, Dr. Sarosh Koshy, Global Relations Minister for Southern Asia of the Christian Church (Disciples of Christ) and United Church of Christ, and Rev. Dr. Marco Cable, Co-Executive of Global Ministers and President of the Disciples Overseas Ministries, embarked on a significant visit to Sri Lanka on 20th of August 2024.
Their journey began in Colombo, where they were warmly welcomed by Mr. Praveen Joseph, the acting director of the Diakonal Ministry. The following day, they ventured to Jaffna, guided by Mr. N.K.Rameshkumar, the CACM's treasurer.
During their time in Jaffna, the esteemed visitors toured various churches, including those in Thellipalai, Uduvil, Manipay, Pandatheripu, Chavakacheri, Keerimalai, and the City Mission. Through these visits, they gained a deeper understanding of the historical significance and pressing needs of these communities.A highlight of their visit was a meeting with the executive committee of the CACM and parish priests at the Christian Theological Seminary Sri Lanka. This gathering provided an opportunity for open dialogue and collaboration.
Continuing their journey, Dr. Koshy and Rev. Dr. Cable travelled to Poovarasankulam to witness the ongoing works and activities of the local community. They also engaged in discussions with parish priests from Vavuniya, fostering stronger connections and understanding.
Their visit concluded with a meaningful participation in the Sunday service at the Colombo CACM church. Rev. Dr. Marco Cable delivered a powerful message, inspiring and uplifting the congregation. The presence of these distinguished global ministers undoubtedly served to energize and motivate both the clergy and the congregation.
அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ சீடத்துவ திருச்சபை மற்றும் கிறிஸ்துவின் ஒன்றுபட்ட திருச்சபை அமைப்புக்களினுடைய உலகப் பணிகளுக்கான தெற்காசிய நாடுகளின் உயர் அதிகாரியான கலாநிதி சரோஸ் கோஷி அவர்களும், உலகளாவிய திருப்பணிகளின் நிறைவேற்று சபை உறுப்பினரும் சீடத்துவ கிறிஸ்துவ சபையின் பிறதேச திருப்பணிகளின் அருட்கலாநிதி மார்க்கோ கேபிள் அவர்களும் ஆகஸ்ட் 20ஆம் திகதி கொழும்பு விமான நிலையத்தினை வந்தடைந்தனர். வருகை தந்த இவர்களை சேவைத் திருப்பணி மன்ற பதில் இயக்குனர் திரு. பிரவீன் ஜோசப் அவர்கள் வரவேற்று அழைத்து வந்தார். மறுநாள் இவர்களை திருச்சபையின் பொருளாளர் திரு. N. K. ரமேஸ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தார்.
இவர்கள் தெல்லிப்பளை, உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, கீரிமலை, சாவகச்சேரி, யாழ் நகர்ப்பணித் திருச்சபை என்றவற்றை பார்வையிட்டு வரலாறுகளையும் தேவைகளையும் கண்டறிந்து கொண்டனர். பின்னர் மாலை இறையியல் கல்லூரியின் ஆளுநர்சபை உறுப்பினர்களையும் CACM இன் உத்தியோத்தர்களையும் சந்தித்த பின்னர் மறுநாள் பூவரசங்குளம் சென்ற அவர்கள் நடைபெறும் அனைத்துப் பணிகளையும் பார்வையிட்டதுடன் வவுனியா பகுதியில் பணியாற்றும் இறைபணியாளர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். அங்கிருந்து கொழும்புக்குத் திரும்பிய அவர்கள் ஞாயிறு காலை வழிபாட்டில் கலந்து கொண்டனர். அருட்கலாநிதி மார்க்கோ கேபிள் அவர்கள் இறைசெய்தியினைப் பகிர்ந்து கொண்டார். இவர்களுடைய வருகையானது இறைபணியாளர்களுக்கும் இறைமக்களுக்கும் உற்சாகத்தினைக் கொடுத்திருந்தது.