The Church of the American Ceylon Mission (CACM) held a spiritually enriching three-day retreat for its priests from the morning of February 24th to lunchtime on February 26th at the Kopay Sangamam Catholic Retreat Center. Under the leadership of the Church's Chairperson, Rev. A. S. Thevagunananthan, all participating priests engaged wholeheartedly in this time of reflection and renewal.
The retreat was led by Rev. S. M. Selvaratnam from Karainagar, who delivered inspiring sermons each morning and evening. Alongside these sermons, the priests dedicated time to personal Bible study and prayer, fostering deep introspection and spiritual growth.
The retreat culminated in a solemn communion service at the Sangamam Chapel, officiated by the Chairperson of the CACM. This transformative experience not only strengthened the priests' spiritual lives but also deepened their faith and renewed their commitment to their sacred ministry.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் ஊழியர்களுக்கான மூன்று நாள் ஞான ஒடுக்கம் பெப்ரவரி மாதம் 24ம் திகதி காலை தொடக்கம் பெப்ரவரி மாதம் 26ம் திகதி மதியம் வரை கோப்பாயில் அமைந்துள்ள சங்கமம் எனும் கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித் தியாகிகளினுடைய தியான இல்லத்தில் நடைபெற்றது. சி.எ.சி.எம் திருச்சபை தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களின் வழிகாட்டலில் சி.எ.சி.எம் திருச்சபையின் அனைத்து குருமார்களும் இந்த ஞான ஒடுக்கத்தில் முழுமையாக பங்குபற்றியிருந்தனர்.
இந்த மூன்று நாட்களுக்குமான ஞான ஒடுக்கத்தை அருட்தந்தை கரவையூர் சா. ம. செல்வரட்டணம் அடிகளார் ஞான ஒடுக்க நடத்துநராக இருந்து வழிநடத்தினார். அவரது காலை மாலை தியானங்களுடன் திருமறைப்படி தனித் தியானம் மற்றும் செபம் என்பனவற்றில் அதிக நேரம் ஈடுபட குருமார் வழிப்படுத்தப்பட்டனர்.
இறுதி நாள் மதியம் சங்கமம் தியான இல்ல சிற்றாலயத்தில் திருவிருந்து வழிபாடு திருச்சபை தலைவரால் நடத்தப்பட்டது. குறித்த மூன்று நாள் ஞான ஒடுக்கமானது சி.எ.சி.எம் திருச்சபை குருவானவர்களின் ஆன்மிக வாழ்வைப் பெலப்படுத்தும் நிகழ்வாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.