The Vanni Region Children’s Rally 2024 took place on Saturday, September 17, at 9:00 AM at St. Paul’s Church, Murukandy, under the theme “Unchanging God in an Ever-Changing World” (Ephesians 13:7). The event began with an inspiring sermon by Miss M. Kamsika, setting the tone for a day of faith, fellowship, and celebration of God’s steadfastness.
Following the sermon, participants embarked on a witnessing walk to Kilinochchi Sivapathakalayaham American Tamil Mixed School, where the day’s competitions were held. The event was opened with a prayer by Rev. S. Suthasini, marking the start of a series of spirited activities.
Children from across the Wanni region participated in individual singing, group singing, and Bible quizzes, showcasing their talents and biblical knowledge. In addition to the competitions, certificates and champion cups were awarded to the children for their achievements in earlier events such as memory verse, speech, essay competitions and art competitions.
The children rally was a wonderful occasion for the children to grow in their faith, celebrate their gifts, and connect with fellow participants in the region. It was a day filled with joy, encouragement, and a reminder of God’s unchanging presence in their lives.
வன்னி பிராந்தியத்தின் பிள்ளைகள் விழாவானது இவ்வாண்டு 2024 "மாறிவிடும் உலகு மாறாதவர் கடவுள்" (எபி 13 : 07) என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக செப்டெம்பர் 17, 2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பரி. பவுல் ஆலயம், முருகண்டி திருச்சபையில் அதன் ஞாயிறு பாடசாலை பிள்ளைகளால் வழிபாடு நடாத்தப்பட்டது. இதன் போது செல்வி ம. கம்சிகா என்பவரால் அருளரையாற்றப்பட்டது. பின்னர் சாட்சிப் பவனியாக கிளி/ சிவபாதகலையகம் அ.த.க. பாடசாலை சென்றடைந்து அருட்பணி சு. சுதாசினி அவர்களுடைய ஜெபத்தோடு போட்டிகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தனிப்பாடல், குழப்பாடல் மற்றும் வேதாகமப் புதிர்போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றிபெற்ற பிள்ளைகள் மற்றும் திருச்சபைக்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் சான்றுதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வுகளான மனனவசனம் ஒப்புவித்தல், கட்டுரை எழுதுதல், சித்திரம் வரைதல் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பிள்ளைகள் வெற்றிக் கிண்ணங்களும் சான்றுதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் பிராந்தியத்தின் அநேக பிள்ளைகள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள் என்பது சிறப்பம்சமாகும்.