The Church of the American Ceylon Mission hosted a workshop for nursery teachers on July 6th and 7th, 2024 at the Christian Theological Seminary Sri Lanka. This workshop brought together thirteen dedicated teachers to enhance their knowledge and skills.
Mr. K. Sathiyaseelan, Assistant Zonal Education Director (Vadamaraatchi), served as the resource person for the first day. He delivered a captivating session on the topic of "Environment: Types and How to Teach Them to Young Children." The second day commenced with an insightful talk by Rev. Thevagunananthan, Chairperson of the CACM. He addressed the critical role of nursery teachers, emphasizing their duties and responsibilities, particularly with regard to social responsibility. Miss. S. Sivani followed, delving into the "Psychological Aspects of Teaching". Mr. S. Sivakaran then presented a captivating session on "Art and Crafts," equipping teachers with engaging and age-appropriate activities to nurture creativity and exploration in their students.
The afternoon session facilitated a lively discussion among the teachers, allowing them to share experiences and challenges faced in their classrooms. The workshop concluded with a heartfelt prayer and blessings delivered by the Jaffna regional chairperson. The event was graced by the presence of the Chairperson of the CACM, the Jaffna regional chairperson, secretary, treasurer, and the officer of the Diaconal Ministry.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை யாழ் பிராந்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை ஜூலை மாதம் 06ஆம், 07ஆம் திகதிகளில் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி மருதனார்மடத்தில் நடைபெற்றது. இதில் 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் வளவாளராக முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் (வடமராட்சி) திரு. கே. சத்தியசீலன் அவர்களால் சூழல் என்றால் என்ன? சூழலின் வகைகள்ரூபவ் அவற்றின் மூலம் மாணவர்களுக்கு நாம் எதை கற்பிக்க வேண்டும்? என்பதை தெளிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் “கடமைகளும் பொறுப்பும் ” என்ற தலைப்பில் சமூகப் பொறுப்பு? சூழல் தொடுவான பொறுப்பு? பொருளாதாரப் பொறுப்பு? என்பவற்றை கற்றுக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து செல்வி. எம். சிவானி அவர்களால் உளவியல் தொடர்பான பாடம் கற்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் செயலமர்வில் வளவாளர் திரு. ரி. சசிகரன் அவர்களால் சித்திர கலை செயல்பாடுகளை தெளிவுபடுத்தினார்.
மதிய இடைவேளை பின்னர் ஆசிரியர்களான கலந்துரையாடல் நடைபெற்று பிராந்திய தலைவரின் இறுதி ஜெபத்துடன் செயலமர்வு இனிதே நிறைவு பெற்றது. இதன்போது திருச்சபையின் தலைவர், யாழ் பிராந்திய குருமுதல்வர், யாழ் பிராந்திய செயலாளர், யாழ் பிராந்திய பொருளாளர், காரைநகர் திருச்சபை குருவானவர் மற்றும் சேவைதிருப்பணிமன்ற நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.