The vibrant energy of childhood filled the air as the American Ceylon Mission church Karainagar’s Anbu Cholai nursery hosted its annual sports meet on Tuesday the 06th of August 2024. The event was graced by the presence of Rev. A.B. Thevathas, Secretary of the CACM, as the chief guest.
With a total of 65 enthusiastic young students and a dedicated team of four teachers led by the nursery manager, Rev. S. Suthasini, the day was filled with laughter, cheers, and friendly competition. A variety of engaging games were organized, providing the children with an opportunity to showcase their athletic abilities and teamwork spirit.
கடந்த 06.08.2024 செவ்வாய்க்கிழமை அன்று காரைநகர் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் அன்புச்சோலை முன்பள்ளியில் வருடாந்த விளையாட்டு விழா சிறப்புற நடைபெற்றது. இதன்போது திருச்சபையின் செயலாளர் அருட்பணி. ஏ. பி. தேவதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக வருகைதந்து விழாவை சிறப்பித்தார்.
இவ் விளையாட்டு விழாவில் பயன்தரும் பல நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நிகழ்வுகளில் பங்குபற்றியதை அவதானிக்க முடிந்தது. இவ் அன்புச்சோலை முன்பள்ளியில் 65 மாணவர்கள் உள்ளனர். இவர்களை முகாமையாளராக அருட்பணி. எஸ். சுதாசினி அவர்களுடன் இணைந்து 04 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது